சிங்கள இராணுவத்திற்கு எதிராக ஆதரவாக போராட்டங்கள்!



கிளிநொச்சி சந்திரன் பூங்காவில் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் இன்று நடாத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான இன்று கிளிநொச்சியில் முன்னணி கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியுள்ளது.

இதனிடையே 30 வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த இராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு இன்று முஸ்லீம் தரப்புக்களால் கிண்ணியாவில் நடாத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் அற்ற நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் குறித்த நிகழ்வை கிண்ணியா சமூக நலன் விரும்பிகள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

கிண்ணியா மணிக் கூட்டுக் கோபுர சந்தியில் இருந்து கிண்ணியா பிரதான வீதி ஊடாக நடை பவணியாக இலங்கை தேசியயை கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விடுமுறை நாளாக இருந்த போதிலும் கிண்ணியா பிரதேச செயலாளர், அரபுக் கல்லூரி மாணவர்கள், கிண்ணியா பிரதேச நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.




No comments