யார் உண்மை?
பொது வேட்பாளராக நீங்கள் போட்டியிடுவீர்களா என சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக் கொண்டதாக சுமந்திரனும், தான் அவ்வாறு கேட்கவில்லை சுமந்திரன் அதீத கற்பனையில் இருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.
பொது வேட்பாளர் தொடர்பான முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்படும் நிலையில் பொதுவேட்பாளராக நீங்கள் போட்டியிடுவீர்களா என சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டதாக சுமந்திரன் கூறியது பொய்யாக இருந்தால் பொது வேட்பாளர் விடயத்தை மலினப்படுத்த சுமந்திரன் மேற்கொண்ட சதியாக அது அமையும்.
மேலும் சுமந்திரனை போட்டியிடுவீர்களா என சுரேஷ் பிரிமச்சந்திரன் கோரிவிட்டு பின்னர் அதனை மறைத்திருந்தால் அது பொது வேட்பாளர் தொடர்பான முன்னெடுப்புகளின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்தும்.
இருவர்களில் யார் உண்மை சொல்கிறார் என்பது இருவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விடயம். இதனை பொது வெளியில் பகிரங்கப்படுத்தி பொய் கூறுபவரின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டியது இருவரில் உண்மையை கூறுபவரின் கடமையாகும்.
எனவே இருவரும் பொது விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment