துப்பாக்கிச் சூட்டில் ஸ்லோவாக்கியா பிரதமர் படுகாயமடைந்தார்
59 வயதான ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ரொபேர்ட் பிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை ஹண்ட்லோவா நகரில் அவருடைய ஆதரவாளர்களுடன் கூட்டத்தை நடத்தினார். ஆதரவாளர்களுடனான சந்திப்பில் மர்ம நபர் ஒருவர் ரொபேர்ட் பிகோ மீது 4 முறை துப்பாக்கியால் சுட்டார்.
ரொபேர்ட் பிகோவின் வயிற்றில் படுகாயம் ஏற்பட்டது. அவரை பாதுகாவலர்கள் காருக்குள் ஏற்றி அருகில் உள்ள பான்ஸ்கா பைஸ்ட்ரிகாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் உலங்கு வானூர்தி இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ரொபேர்ட் பிகோவுக்கு மூன்று மணி நேர அறுவைச் சிகிற்சை நடத்தப்பட்டது. அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கியால் சுட்ட தாக்குதலாளியை காவல்துறையினர் சம்பவ இடத்தில் கைது செய்தனர். தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர் சம்பவ இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அதிகாரிகளால் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
தாக்குதலாளி நபர் 71 வயதான எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் என உறுதிப்படுத்தப்படாத உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் பிராட்டிஸ்லாவாவிலிருந்து 180 கிமீ (112 மைல்) தொலைவில் உள்ள ஹன்ட்லோவாவில் 14:30 (12:30 GMT) மணிக்கு, அரசாங்கக் கூட்டம் நடைபெற்ற கலாச்சார சமூக மையத்தின் முன் திரு ஃபிகோ மக்களைச் சந்தித்தபோது இந்தத் தாக்குதல் நடந்தது.
பிகோ மீதான தாக்குதலுக்கு உலகத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
59 வயதான திரு ஃபிகோ, கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்லோவாக்கியாவில் ஜனரஞ்சக-தேசியவாத கூட்டணியின் தலைவராக மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
இவர் ரஷ்ய ஆதரவாளராவார். இவர் பதவி ஏற்ற பின் ஜனவரியில் அவர் உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்தினார்.
அமைதி ஏற்படாத உக்ரைன் போரில் நேட்டோ எடுக்கும் எந்த ஒரு தீர்மானத்தையும் நான் ஆதரிக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
உக்ரைன் நேட்டோவுக்குள் இணைந்தால் அதனை நான் முழுமையாக எதிர்ப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
உக்ரைன் போர் 2022 ஆண்டு தொடங்கவில்லை அது 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி பேசும் மக்களை தேடித் தேடி வேட்டையாடிபோதே இப்போர் தொடங்கிவிட்டது. இதற்கு உறுதுணையாக இருந்தது அமெரிக்கா மற்றும் அதன் புலனாய்வு அமைப்பும் தான் என அவர் நேரடியாகவே குற்றம் சுமத்தியிருந்தார்.
அத்துடன் உக்ரைனில் நடைபெறுவது நேட்டோவின் நிழல் யுத்தம் என்று சுட்டிக்காட்டினார்.
உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்றால் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தினாலே போர் நின்று விடும் என்று பொதுவெளியில் தனது கருத்தைத் தெரிவித்தவர்.
இவருடைய நிலைப்பாது ஒட்டுமொத்தமாக மேற்கு நாடுகளில் நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment