சரத் பொன்சேகா மீண்டும் ஜனாதிபதி வேட்பாளர்?



இலங்கையில் முதலாவது தேர்தலாக ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ரணிலிற்கான பிரதான போட்டியாளராக உள்ள சஜித் பிறேமதாசவை தோற்கடிக்க முன்னாள் இராணுவத் தளபதி  சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைக்க நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டு சேராமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இறுதி யுத்தம் தொடர்பில் முன்னாள் இராணுவத்தளபதி புத்தகமொன்றை வெளியிடவுள்ளார்.

அதேவேளை சரத்பொன்சேகா இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே ஜக்கிய மக்கள் சக்தியிலிருந்து சரத்பொன்சேகாவை வெளியேற்ற ஏதுவாக அண்மை நாட்களில் மற்றைய தளபதிகளான மகேஸ் சேனநாயக்க உள்ளிட்ட பலர் களமிறக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 





No comments