இறுதி யுத்த குழந்தைகள்:பிக்குகள் ஆக்கப்பட்டனரா?



இறுதி யுத்தத்தின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் சிராந்தி ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் கேள்வியெழுப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்த காலத்தில் அநாதரவாக மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறார்கள் அப்போதைய காலத்தில் மனித நேய அமைப்பினை நடாத்தியதாக கூறப்படும் சிராந்தி ராஜபக்ச அவரது மகன் நாமல் ராஜபக்சவினரால் பொறுப்பேற்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக இறுதி யுத்தத்தில் தற்கொடையாகிய போராளிகளது குழந்தைகள் மற்றும் விடுதலைப்புலிகளால் பேணப்பட்ட சிறார் இல்லங்களை சேர்ந்த குழந்தைகளே கையளிக்கப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

எனினும் அவர்கள் இனைவரும் இனச்சுத்திகரிப்பாக பௌத்த விகாரைகளில் கையளிக்கப்பட்டு சிங்கள பௌத்த துறவிகள் ஆக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாற்றிக்கொண்டிருக்கும் மாணவி ஒருவரின் புகைப்படத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமிழ் க்சகுழந்தை ஒன்று இருப்பதாக அந்த குழந்தையின் பெற்றோர் கூறுகின்றனர்.

எனினும், அது குறித்து விசாரித்தபோது அப்படியொரு மாணவி இல்லையென கூறப்படுகின்றது. அந்த குழந்தைகளுக்கு என்ன நடந்தது.அதனையே அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் கேட்டிருந்தார் எனவும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


No comments