பொன்னாவெளியும் சற்குணராசா கதிரையும்!





கதைக்க வேண்டிய நேரத்தில் கதிரைகளிற்காக கள்ள மௌனம் காப்பதும் பின்னர் வீர கதைகள் பேசுவதும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் முதல் பீடாதிபதிகள் மற்றும் மாணவர் தலைவர்களது உத்தியாகும்.

தற்போது பொன்னாவெளி சாதக பாதகங்கள் பற்றி வாய் திறந்தால் அமைச்சர் கோபித்துக்கொள்வார் என கள்ள மௌனம் காத்திருக்கிறது யாழ்.பல்கலை.

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளியில் முருகைக்கற்களை அகழ்வதற்கு அரசாங்கம் டோக்கியோ சீமெந்து நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

அதாவது இந்தபொன்னாவெளி கிராம செயலாளர் பிரிவின் 1,200 ஹெக்டேயர் நிலப்பரப்பளவில் சுண்ணக்கல் அகழ டோக்கியோ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது 

குறிப்பாக கரையோரங்களில் 300 மீற்றர் வரையான ஆழத்தில் சுண்ணக்கல் அகழ முயற்சிக்கின்றார்கள் 

ஆனால் மேற்படி அகழ்வுக்கு  பொன்னாவெளி,வேரவில், வலைப்பாடு உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்

இந்த திட்டத்தின் சாதக, பாதக தன்மைகள் குறித்து புவியில் ரீதியாகவும்  விஞ்ஞான ரீதியாகவும்  முறையான ஆய்வுகள் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றார்கள் 

சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டால் கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்து பிரதேசங்கள் உவராகி வாழ முடியாத சூழல் ஏற்படும் என சொல்லுகின்றார்கள் 

குறிப்பாக தங்களது விவசாயம் முற்றுமுழுதாக பாதிக்கப்படுவதோடு, கடற்றொழிலும் பாதிப்புக்குள்ளாகும் என அச்சம் வெளியிடுகின்றார்கள் 

தூசு உள்ளிட்ட கழிவுகளால் அபாயகரமான நோய்த்தாக்கம் ஏற்படும் என்றும் சொல்லுகின்றார்கள் 

யாழ்ப்பாண பாறை அமைப்பு மயோசின் கால சுண்ணக்கல் வகைக்குரியதாவும் இளமடிப்பு பாறை வகைக்கு உரியதாகவும் காணப்படுவதால்  அகழ்வுகளால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என் சூழலியலாளர்களும்  அச்சமூட்டுகின்றார்கள் 

ஜே.வி.பி பா அனுர குமார திசாநாயக்க  கூட  மக்களின் கோரிக்கையின் நியாயம் குறித்து பாராளமன்றத்தில் குரல் எழுப்பி இருக்கின்றார் 

இந்த  திட்டத்தின் சாதக, பாதகத் தன்மையை புவியியல் ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தக் கோரி, யாழ்ப்பாண  பல்கலைக்கழக துணைவேந்தருக்கு,சிவஞானம் சிறீதரன் எழுத்த்தில் கோரிக்கை முன் வைத்திருந்த போதும் பல்கலை கழகம் அமைதியாக உள்ளது 

No comments