கற்பிக்க ஆசிரியர்கள் இல்லையாம்?



இலங்கையிலுள்ள  பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மேல் மாகாணத்தில் ஏறக்குறைய 7,000 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது ; கிழக்கு மாகாணத்தில் கிட்டத்தட்ட 3,800 வெற்றிடங்களும், வடமத்திய மாகாணத்தில் 3,698 வெற்றிடங்களும், பதிவாகியுள்ளன. தென் மாகாணத்தில் 3,100 வெற்றிடங்களும், பதிவாகியுள்ளன; மற்றும் மத்திய மாகாணத்தில் கிட்டத்தட்ட 6,200 வெற்றிடங்களும், பதிவாகியுள்ளன.

அரசு செலவினங்களை கட்டுப்படுத்த ஆசிரியர் நியமனத்தை அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என ஸ்டாலின் கூறினார்.

“தற்போது உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பா விட்டால் இப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும்.

“இருப்பினும், அரசாங்கம் மேல் மாகாணத்திற்கு 2,500 ஆசிரியர்களை இரண்டு முறை பணியமர்த்தியது, ஆனால் அவர்கள் முறையாக ஆட்சேர்ப்பு செய்யபடவில்லை.

எனவே, தற்போதுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு உரிய முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார் 

No comments