கூலிக்கு ஆட்கள் உண்டு:இலங்கை!



இலங்கை படைகளிலிருந்து தப்பித்து நாட்டை விட்டு வெளியேறும் முப்படைகளதும் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

இந்நிலையில் முப்படைகளையும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பினை காண்பித்து அனுப்பி வைக்கும் முகவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஆதன் ஒரு அங்கமாக ரஸ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி மக்களிடம் பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முறையாக அறிவிக்காது முப்படையில் இருந்து விலகியுள்ள இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மே 20 ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்பு காலத்தில் அதிகாரப்பூர்வமாக சேவையிலிருந்து வெளியேறுவதை முறைப்படுத்த முடியும் என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

ஊடக அறிக்கையின்படி, ஏப்ரல் இரண்டாம் திகதிக்கு முன் விடுப்பு இல்லாத அனைத்து அதிகாரிகள் மற்றும் பிற தர அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, நூற்றுக்கணக்கான இலங்கை படையினர் ரஸ்ய இராணுவத்தில் இணைந்து கூலிப்படையாக செயற்பட்டு வருவதாக அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.சேவையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ரஸ்யப் படையில் கூலிப்படையாக இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அதனை இலங்கை இராணுவம் முற்றிலுமாக மறுத்திருந்தது. சேவையில் உள்ள எவரும் கூலிப்படையாக செயற்படவில்லை எனவும், படையில் இருந்து விலகிய முன்னாள் வீரர்களே அவ்வாறு இணைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.


No comments