தண்டிப்பு அச்சம்: தப்பியோடும் படை அதிகாரிகள்!



ஜனாதிபதி தேர்தல் ஆட்சி மாற்றத்தின் பின்னராக தாங்கள் யுத்த குற்றங்களிற்காக தண்டிக்கப்படலாமென்ற அச்சம் இலங்கை படைகளது அதிகாரிகள் மட்டத்தில் மூண்டுள்ளது.குறிப்பாக போர் நாயகனாக கருதப்பட்ட கோத்தபாய மோசமாக விரட்டப்பட்டு நாடு நாடாக அலைந்து மீண்டும் கொழும்பில் முடங்கியமை அச்சத்தை படை அதிகாரிகள் மட்டத்திடையே உருவாக்கியுள்ளது.

இதனிடையே 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின் 197 அதிகாரிகள் உட்பட சுமார் 8000 பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மார்ச் மாதத்தில் மட்டும் ஆயுதப்படைகளின் ஒன்பது அதிகாரிகளுடன் 442 பேர் ஆயுதப்படையை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவ சேவையை விட்டு வெளியேறியவர்களில் 137 இராணுவ அதிகாரிகள் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 19 விமானப்படை அதிகாரிகள் இராணுவ சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் நிர்வாக பிரச்சனைகள் காரணமாக இராணுவத்தை விட்டு விலகியுள்ளதாக கூறப்படுகின்ற போதும் ஆட்சியாளர்களிடையே இராணுவத்தை பாதுகாக்கும் மனோநிலை இன்மையே காரணமென தெரியவருகின்றது.


No comments