பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதி செய்ததாக இருவரைக் சுட்டுக்கொன்ற ரஷ்யப் படைகள்
ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் இன்று வியாழக்கிழமை பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதி செய்ததாக சந்தேகிக்கப்படும் இருவரை ரஷ்ய சிறப்புப் படைகள் கொன்றதாக தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
கபார்டினோ-பால்காரியா குடியரசின் தலைநகரான நல்சிக்கின் புறநகர் பகுதியில் சந்தேக நபர்கள் முற்றுகையிடப்பட்டு, மத்திய பாதுகாப்பு சேவையின் சிறப்புப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குழு தெரிவித்துள்ளது.
Post a Comment