ஆமைக் கறி சாப்பிட்டதால் 8 குழந்தைகள் பலி!! 78 பேருக்கு உடல் நலம் பாதிப்பு!!


ஆபிரிக்க நாடான தான்சானியாவில் ஜன்ஜிபார் பகுதிக்கு உட்பட்ட பெம்பா தீவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர். இதன் பின்னர் 8 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் முதியவர்களில் 78 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர் என மருத்துவ ஆய்வக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச்சில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது. தான்சானியாவின் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த மாபியா தீவில் வேணி கிராம பகுதியில், கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்ட 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments