பதுங்கு குழிகளை தூசி தட்ட வேண்டும்: நிதியைக் கோரும் யேர்மனி நகரசபைகள்
யேர்மனியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அரசாங்கத்தில் கீழ் பயன்பாட்டில் இல்லாத பதுக்கு குழிகளை மீண்டும் புதிப்பிக்க வேண்டும் என்று இன்று சனிக்கிழமை கோரிக்கைகளை விடுத்துள்ளன.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் அதன் மூன்றாம் ஆண்டில் நுழையும் போது, பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் பின்லாந்தில் உள்ள சிவில் பாதுகாப்பு வசதிகளை பார்வையிட்ட ஒரு நாளுக்குப் பின்னர் இக்கருத்து வெளிவந்துள்ளது.
பனிப்போரின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கட்டப்பட்ட 2,000 பதுங்கு குழிகளில் 600 மட்டுமே இன்னும் உள்ளன. இப்பதுங்கு குழிகளில் 5 இலட்சம் பேர் தங்க முடியும்.
மேலும் செயலிழந்த பதுங்கு குழிகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அவசரத் தேவை உள்ளது. அத்துடன் பதுங்கு குழிகள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளூராட்சி மன்றங்களால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
நவீன தங்குமிடங்கள் கட்டப்பட வேண்டும் என்றும், நகர்ப்புற மையங்களில் நிலத்தடி வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களையும் பயன்படுத்தலாம் என்றும் நகரங்கள் மற்றும் முனிசிபாலிட்டிகளின் சங்கத்தின் தலைவரான André Berghegger கூறினார்.
ஜேர்மனி மொபைல் ஃபோன் பயன்பாடுகளை மட்டும் நம்பியிருக்க முடியாது என்று கூறி, கூடுதல் சைரன்கள் நிறுவப்பட வேண்டும் என்று பெர்கெகர் கூறினார்.
அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 1 பில்லியன் யூரோக்கள் சிவில் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்
Post a Comment