அறிக்கையில் 1500 பக்கத்தை காணோம்?



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் 1,500 இற்கு பக்கங்கள் காணாமலாக்கப்பட்டுள்ளது. 

அதாவது மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கையின் பேரில் கிறிஸ்தவ  திருச்சபைக்கு கையளிக்கபட்ட 70,000 பக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில்  இல்  1,500 பக்கங்களை காணவில்லை 

குறிப்பாக சஹ்ரானின் மனைவி  வழங்கிய சாட்சியங்கள் காணாமலாக்கப்பட்டுள்ளது 

அதே போன்று இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளுடன் நெருக்கமான தொடர்பைகொண்டிருந்த சாரா ஜெஸ்மின் உட்பட்டவர்களின் சாட்சியங்களையும்  காணாமலாக்கி இருக்கின்றார்கள் 

ஆனால் சம்பவம் தொடர்பாக 99 சதவீத விசாரணைகள் முடிந்துவிட்டதாக ரணில் விக்ரமசிங்கே அரசாங்கம் தொடர்ச்சியாக பொய் பேசி வருகின்றது 

இதற்காக சஹ்ரான் மற்றும் அவரின் ஒட்டு குழு உறுப்பினர்களை அறிந்த 23 முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவு அவர்களை மேற்படி சம்பவத்தின் சூத்திரதாரிகளாக பலிகடாக்களாக முயற்சிக்கின்றனர் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் பகிரங்கப்படுத்தியுள்ளார் 

அதே நேரம் பிள்ளையானின் நெருங்கிய சகா ஆசாத் மௌலானாவின் வாக்குமூலங்கள் உட்பட்ட முக்கிய பல சாட்சியங்கள் மீது இதுவரை எந்த விசாரணைகளும்  நடத்தப்படவில்லை.

குறிப்பாக சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவுக்கும்   பிள்ளையான் தொடர்பாளராகவிருந்தது தொடர்பாக விசாரிக்கப்படவில்லை 

அதே போல இராணுவ புலனாய்வு பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பிள்ளையான் ஊடக சஹ்ரான் குழுவிற்கு பணம் பரிமாற்றப்பட்டது தொடர்பாகவும் விசாரிக்கப்படவில்லை 

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே  மற்றும்  சஹ்ரானுக்குமிடையில் இ டையில் நடந்த பல்வேறு சந்திப்புகள் குறித்து விசாரணைகள் நடக்கவில்லை 

இது மாத்திரமின்றி தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஒன்றில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய  லொறியொன்றை தடுக்காது விடுவித்தது தொடர்பாகவும்  விசாரிக்கப்படவில்லை 

மேற்படி லொறியானது கோட்டாபய ராஜபக்சவிற்கு மிக நெருக்கமான அவன்ட் கார்ட் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமானதாக இருந்ததாக அடையாளம் காணப்பட்டு இருந்தது தொடர்பாகவும்  விசாரிக்கவில்லை 

ஆனால் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் பிரதான மூளையாக அறியப்படும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே முதல் அவரின்  உதவியாளராக இயங்கிய பிள்ளையான் வரை அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ளார்கள் 

கோட்டாபய ராஜபக்சே மக்கள் வரி பணத்தில் சகல சலுகைகளை அனுபவித்தபடி தன்னை நியாயம் செய்து  புத்தகம் எழுதி கொண்டு இருக்கின்றார் 

ஆனால்  பாதிக்கப்பட்டவர்கள்  5 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காமல் தடுமாறுகின்றார்கள் .


No comments