எரிமலை வெடித்தது: நீரோடையாக ஓடும் எரிமலைக் குழம்புகள்


ஐஸ்லாந்தில் உள்ள எரிமைலை ஒன்று கடந்த மூன்று மாதங்களில் நான்காவது தடவையாகவும் வெடித்தது. நேற்றுச் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிப்பால் இரவு முழுவதும் எரிமலைக்குழம்பு ஆறுபோல் ஓடியது. இதனால் அப்பகுதி முழுவதும் செம்மஞ்சள் நீரோடைகள் போன்று அப்பகுதி முழுவதும் காட்சியளித்தன.

எரிமலை வெடிப்பானது ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள ஸ்டோரா-ஸ்கோக்ஃபெல் மற்றும் ஹகாஃபெல் மலைகளுக்கு இடையில் சுமார் 3 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பிளவை உருவாக்கியது.

ஐஸ்லாந்தின் தலைநகரான கிரின்டாவிக்குக்கு தென்மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூவாயிரத்து எண்ணூறு மக்கள் வசிக்கும் கடற்கரை நகரமே ரெய்க்ஜேன்ஸ் ஆகும்.

பல வாரங்களாக இப்பகுதியில் எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் குடியிருப்பாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 

இதேபோன்ற ஐஸ்லாந்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ப்ளூ லகூன் தெர்மல் ஸ்பாவில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

சனிக்கிழமை ஓடத் தொடங்கிய எரிமலைக் குழம்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மெதுவாகவும் நிலையாகவும் இருப்பதாக ஐஸ்லாந்து வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெடித்து ஓடிய எரிமலைக் குழம்பானது குடிநீர்க் குழாயிலிருந்து 200 மீற்றர் தொலைவில் இருப்பதாகவும் நீர் விநியோகக் குழாய் ஸ்வார்ட்செங்கி மின் நிலையத்திற்கு அருகில் உள்ளது என்றும் ஐஸ்லாந்து வானிலை அலுவலகம் கூறியுள்ளது.

எரிமலைக் குழம்பானது தெற்கு நோக்கிப் ஓடுவதால் கடல் நோக்கி சென்றால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என நோர்வே வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் கூறினார்.

காரத் தன்மை கொண்ட எரிமலைக் குழம்பு கடல் நீருடன் சேர்ந்தால் குளோரின் புகைகளை உருவாக்கும் என அவர் மேலும் விளக்கினார்.

No comments