ஞாயிறு இறுதி கிரியைகள்!

 


தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நீண்ட இழுபறிகள் பின்னராக பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர்  முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

எனினும் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் அவரது சொந்த மண் பயணிப்பது தாமதமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது பிரேத பரிசோதனைக்காக  வைத்தியசாலையில் உடலம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனையின் பின்னராக உடலத்தை கையேற்ற பின்னராக இறுதிக்கிரியைகள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பிடும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

ஏதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சாந்தனின் சொந்த மண்ணான வல்வெட்டித்துறையில் இறுதிக்கிரியைகள் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக உடலத்தை பெற்றுக் கொள்வதற்காக  குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் குடும்பத்தினர்; கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்திற்கு சென்றிருந்தனர்.

எனினும் உடலத்தை விடுவிப்பதற்கான ஆவணங்கள் தவறாகியமையால்  அவற்றை சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியேற்பட்டிருந்தது.


No comments