உலகின் மகிழ்ச்சியான நாடுளில் பின்லாந்து தொடர்ந்து 7வது முறையும் முதல் இடம்
உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளின் பட்டியில் அடங்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன. 2024ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடாக பின்லாந்து அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக ஃபின்லாந்து இடத்தைத் தக்க வைத்துள்ளது.
இந்த வருடாந்த அறிக்கையானது உலகெங்கிலும் உள்ள 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகளாவிய மகிழ்ச்சியை தரவரிசைப்படுத்துகிறது.
சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய ஆறு காரணிகளின் அடிப்படையில் கருததுக் கணிப்பு உள்ளிட்ட ஆதாரத் தரவுகளைப் பயன்படுத்தி இத்தரப்பட்டியில் தயாரிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு இப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
நோட்டிக் நாடுகள் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளன. டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து மீண்டும் இரண்டு மற்றும் மூன்று இடங்களைப் பிடித்தன. அதைத் தொடர்ந்து ஸ்வீடன் நான்காவது இடத்தைப் பிடித்தது. நோர்வே ஏழாவது இடத்தில் உள்ளது.
இப்பட்டியிலில் முதல் 20 இடங்களில் அமெரிக்கா இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு, அமெரிக்கா 15வது இடத்தில் இருந்தது. 2024 இல் அமெரிக்கா 23வது இடத்திற்கு பின்நகர்ந்தது.
கோஸ்டாரிகா மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகள் முதல் 20 நாடுகளின் பட்டியில் நுழைந்துள்ளன.
இந்தியா 126 வது இடத்திலும் , இலங்கை 128வது இடத்திலும் உள்ளது.
2020 இல் தலிபான்கள் ஆப்கானின்ஸ்தானின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்ததில் இருந்து மனிதாபிமான பேரழிவால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
2024 இல் உலகின் 20 மகிழ்ச்சியான நாடுகள்
01. பின்லாந்து
02. டென்மார்க்
03. ஐஸ்லாந்து
04. ஸ்வீடன்
05. இஸ்ரேல்
06. நெதர்லாந்து
07. நோர்வே
08. லக்சம்பர்க்
09. சுவிட்சர்லாந்து
10. ஆஸ்திரேலியா
11. நியூசிலாந்து
12. கோஸ்ட்டா ரிக்கா
13. குவைத்
14. ஆஸ்திரியா
15. கனடா
16. பெல்ஜியம்
17. அயர்லாந்து
18. செக்கியா
19. லிதுவேனியா
20. ஐக்கிய இராச்சியம்

Post a Comment