ரஷ்யா தேர்தல்: பற்றி எரியும் வாக்குப் பெட்டிகள்!!


ரஷ்ய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில், முதல் நாளில் வாக்குச் சாவடிகளில் சிலவற்றில் புடின் எதிர்பாளர்கள் நாசவேலைகளில் ஈடுபட்டதாகவும் அவர்களைக் கைது செய்துள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.




வாக்குப் பெட்டிகளில் பச்சைச் சாயம் (பெயின்ற) ஊற்றப்பட்டது. வாக்குப் பெட்டிகள் எரியூட்டப்பட்டன. வாக்குச் சாவடிகளுக்கு பட்டாசு கொழுத்தி எறிப்பட்டது.  வாக்குச் சாவடிக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டது. இவ்வாறு ஆறு நாசவேலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

ரஷ்யாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறன. எவ்வாறாயினும், சட்ட அமலாக்க அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுவரை குறைந்தது எட்டுப்பேர் கைது செய்யப்பட்டனர்.

புடினுனை தேர்தலில் எதிர்க்கும் நபர்கள் இல்லாததால் புடினே வெற்றி பெறுவார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது.

No comments