பைத்தியக்கார வேலையிலிருந்து வெளியேறுவதைப் பற்றிச் நினைக்கிறேன் - ஜஸ்டின் ட்ரூடோ


நான் ஒவ்வொரு நாளும் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறுவதைப் பற்றி நினைக்கிறேன். தனிப்பட்ட தியாகங்களைச் செய்வது நான் செய்யும் பைத்தியக்காரத்தனமான வேலை என்று கனேடியப் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை ஒரு பிரஞ்சு மொழி ஒளிபரப்பாளருடனான நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நான் ஒவ்வொரு நாளும் பிரதமர் பதவிலிருந்து வெளியேறுவதைப் பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு. தனிப்பட்ட தியாகங்களைச் செய்வது நான் செய்யும் பைத்தியக்காரத்தனமான வேலை. நிட்சயமாக இது மிகவும் கடினமானது. சில நேரங்களில் இது மிகவும் சலிப்பாக இருக்கிறது. ஆனாலும் மற்றொரு தேர்தல் மூலம் மீண்டும் பிரதமராக வரத் திட்டமிட்டுள்ளதாகவும் கனேடியப் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

ஜஸ்டின் ட்ரூடோ தனது அரசியல் எதிர்காலம் குறித்து வளர்ந்து வரும் கேள்விகளை எதிர்கொண்டுள்ளார். கருத்துக்கணிப்புகள் அவர் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுறது.

கருத்துக்கணிப்பில், கனேடியர்கள் அவரது அரசாங்கத்தின் மீது பெருகிய அதிருப்தியை உணர்கிறார்கள். வீட்டு வசதி மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற பிரச்சினைகளால் விரக்தியடைந்துள்ளனர். மக்கள் ஆதரவானது பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு பின்னால் ஆளும் கட்சி பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் அக்டோபர் 2025க்குள் நடத்தப்பட வேண்டும். கனடாவில் ஏறக்குறைய ஒரு தசாப்த கால கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த ட்ரூடோ, பெரும்பான்மை தேர்தல் வெற்றியுடன் ஆட்சிக்கு வந்தார். ஆனால் தாராளவாதிகளுக்கான ஆதரவு இரண்டு அடுத்தடுத்த தேர்தல்களில் குறைந்து வருகிறது.

கடந்த ஆண்டு, அவரும் அவரது மனைவி சோஃபி கிரெகோயர் ட்ரூடோவும் பிரிவதாக அறிவித்தனர். இவர்களுக்கு ஒன்றாக மூன்று குழந்தைகள் உள்ளனர்.

No comments