ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியைத் பதவியிலிருந்து தூக்கினார் உக்ரைன் அதிபர்!!


உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உக்ரைன் நாட்டின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் வலேரி ஜலுஷ்னியை பதவி நீக்கம் செய்துள்ளார்.

மோதல் தொடங்கியதில் இருந்து உக்ரேனின் போர் முயற்சிக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ஜலுஷ்னிக்கும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த மாற்றம் நடந்துள்ளது.

அவருக்குப் பதிலாக ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியை உக்ரைன் அதிபர் நியமித்துள்ளதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார்.

இன்று முதல் புதிய நிர்வாகக் குழு உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நேற்று வியாழக்கிழமை உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.

முன்னாள் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் வலேரி ஜலுஷ்னி

ஜெனரலின் பதவி நீக்கம் உக்ரைனின் போர் துயரங்களை உடனடியாக தீர்க்காது. இராணுவத்தில் தேவையான மாற்றங்கள் குறித்து தானும் ஜெனரல் ஜலுஷ்னியும் ஒரு வெளிப்படையான உரையாடலை மேற்கொண்டதாகவும், ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை பாதுகாத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்ததாகவும் உக்ரைன் அதிபர் கூறினார்.

தற்காப்பு மற்றும் தாக்குதல் போரில் அனுபவம் பெற்றவர் புதிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சிர்ஸ்கி என்று உக்ரைன் அதிபர் கூறினார்.

2022 இல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்தில், உக்ரைனின் தலைநகரான கியேவின் பாதுகாப்பிற்கு புதிய இராணுவத் தளபதி தலைமை தாங்கினார். ரஷ்யாவுக்கு எதிரான எதிர் தாக்குதலுக்கு அவர் சூத்திரதாரியாக இருந்தார்.

பின்னர் கிழக்கு உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளின் தலைவராக பணியாற்றினார்.

ரஷ்யாவுடனான போரின் யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த ஆண்டு ஆயுதப்படைகளுக்கான விரிவான திட்டத்தை எதிர்பார்ப்பதாக ஜெலென்ஸ்கி கூறினார். 

புதிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சிர்ஸ்கி 

ஜெனரல் ஜலுஷ்னி உக்ரேனிய வீரர்கள் மற்றும் பொதுமக்களால் நம்பப்படும் பிரபலமான ஜெனரல் ஆவார். மேலும் அவர் ஒரு தேசிய மதிப்பு மிக்கவராகவும் இருந்துள்ளார். 

இராணுவத் தளபதியின் மாற்றும் பெரும் தவறு என்றும் இது நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது. இதற்கா நாங்கள் அனைவரும் வெரும் விலையைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி மேலும் கூறியது.

பிப்ரவரி 2022 இல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனின் இராணுவத் தலைமைக்கு இது மிகப்பெரிய மாற்றமாகும்.

No comments