கஞ்சா கலந்த இனிப்பு கும்பி கரடிகளுடன் யேர்மன் நாட்டவர் ரஷ்யாவில் கைது!!
யேர்மனி நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் தனது பயணப் பையில் கஞ்சா கலந்த கும்மி கரடி இனிப்புகளை (gummy bears) வைத்திருந்ததை அடுத்து அவர் ரஷ்ய விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அந்த நபர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புல்கோவோ விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஹம்பர்க்கில் இருந்து இஸ்தான்புல் வழியாக விமானத்தில் வந்துள்ளார்.
20 கிராம் (0.035 அவுன்ஸ்) எடையுள்ள "ஃபிங்க் கிரீன் கோல்ட்பியர்ஸ்" என்ற பேக் ஒன்று 6 கும்மி பியர்களைக் கொண்டிருப்பதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட கஞ்சாவில் காணப்படும் முக்கிய மூலப்பொருளான டெட்ராஹைட்ரோகன்னாபினோல் அல்லது THC - இனிப்புகளில் இருப்பது விரைவான சோதனையில் தெரியவந்தது.
அந்த நபர் கரடிகளை தனது சொந்த நாட்டில் வாங்கியதாகவும், பொதுவாக விமானங்களில் ஓய்வெடுக்கும் போது அவற்றை உட்கொள்வதாகவும் விளக்கினார் என்று ரஷ்யாவின் ஃபெடரல் சுங்க சேவை டெலிகிராம் செய்தி சேவையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Post a Comment