கெஹலிய ராஜினாமா:வீட்டிலிருந்து சாப்பாடு!

 


இறுதி யுத்த கால அரச ஊடகப்பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே வெலிக்கடை சிறைச்சாலைக்குப் பொறுப்பான பெண் வைத்திய பொறுப்பதிகாரி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரமுகர்களை சிறைச்சாலை வைத்தியசாலைக்குள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க அனுமதித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை பெற்றுக் கொள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுத்திருந்த கோரிக்கைக்கு வெலிக்கடை சிறைச்சாலை அனுமதி வழங்கியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியர்களின் சிபாரிசுக்கு அமைய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.


No comments