உடலத்திற்காக காத்திருப்பு!



தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அவரது சகோதரர் மதிசுதா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, தனது முகநூல் வழியே அஞ்சலி செலுத்த உள்ளுரில் வருபவர்கள்; இரு தினங்கள் கழித்து வருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்திய மத்திய அரசு சாந்தனை இலங்கைக்கு அனுப்ப தைமாதம் அனுமதி வழங்கியும் தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பாமல் இழுத்தடித்தமை இன்றைய நீதிமன்ற அமர்வில் அம்பலமாகியுள்ளார்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த  சாந்தன் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில்  நேற்று(28)உயிரிழந்தார்.

அவரது புகழுடலை யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டியிலுள்ள பிறந்த மண்ணிற்கு எடுத்துவர பல தரப்புக்களும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.

முன்னதாக நோயுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ருந்த தனது சகோதரனை பார்வையிட சென்றிருந்த மதிசுதா பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி யாழ்ப்பாணத்திற்கு அவசரமாக இந்திய அதிகாரிகளால் திருப்பியனுப்பி வைக்கப்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


No comments