தமிழரசு சந்தை சண்டை முடிவில்லை! சிறீதரன் பதவி விலகுகிறார்?
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாக தெரிவில் அமைப்பு விதிகளை மீறி மேலதிகமாக கட்சி உறுப்புரிமை அற்றவர்களை வாக்களிக்க அனுமதித்தமையை நீதிமன்றில் கட்சியின் முன்னாள் தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறீதரன் பதவி விலகி மீண்டும் தேர்தலை நடாத்த சம்மதித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கானது இன்றைய தினம்(29) யாழ் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை திருகோணமலை நீதிமன்றத்தினால் எடுத்துகொள்ளப்பட்ட வழக்கு ஏப்ரல் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகள் தமிழரசுக்கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே மீள் போட்டி தெரிவை முன்னெடுக்க நீதிமன்றில் சிரேஸ்ட உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment