தமிழ் – முஸ்லிம் மக்கள் பங்காளிகளாக வேண்டும்?
இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான இராஜதந்திர மட்டத்திலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களாணையுடன் நாங்கள் அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம். அப்போது இந்தியாவின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் முறைமை மாற்றத்துக்கு தமிழ் – முஸ்லிம் மக்கள் பங்காளிகளாக வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் கேந்திர மையமாக இலங்கையை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என இந்திய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவு அமைச்சர் ஆகியோரிடம் உறுதியளித்தேன். சீனா உலகில் பலம் வாய்ந்த நாடாக செயற்படுகிறது.நாம் இந்தியாவுக்கு அருகில் உள்ளோம்.சீனாவுடன் முரண்பாடற்ற வகையில் செயற்பட வேண்டும். இருப்பினும் அது ஒருபோதும் பிற நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைய கூடாது எனவும் குறிப்பிட்டார்.

Post a Comment