மீண்டும் வவுனியா வந்ததா கொரோனா?



இலங்கையில்  மீண்டும் கொரோனா தொற்று தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பொதுமகன் உயிரிழந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக  கண்டறியப்பட்டுள்ளது.

அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த நபருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஒரு வருடங்களிற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியாவில் திரிபடைந்த கொரொனா தொற்று தொடர்பில் எச்சரிக்கப்படுகின்ற நிலையில் இலங்கையில் இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது. 


No comments