பாகிஸ்தானுக்குள் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியது ஈரான்
பாகிஸ்தான் நிலப்பரப்புகள் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானில் உள்ள சன்னி முஸ்லிம் போராளிக்குழுவான ஜெய்ஷ் அல் - அட்லின் தளங்களைத் தாக்கியதாக ஈரான் கூறியது.
சிரியா மற்றும் ஈராக் மீது ஈரான் இதேபோன்ற தாக்குதல்களை நடத்தியத் தொடர்ந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் பற்றி நமக்கு என்ன தெரியும்? இந்த நடவடிக்கையில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியது. இத்தாக்குதல் பாகிஸ்தான் வான்வெளியில் ஆத்திரமூட்டும் அத்துமீறல் என்று கண்டனம் செய்தது.
பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்புக் கூறப்படுகிறது.
காசாவில் ஏற்கனவே உள்ள மோதலைச் சுற்றி வளர்ந்து வரும் பதட்டமான சூழ்நிலையை இந்த சம்பவம் மேலும் பதட்டத்தைத் தூண்டிவிடக்கூடும் என்ற அச்சத்திற்கு அப்பால், அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தானுக்கும் அணுஆயுத லட்சியமான ஈரானுக்கும் இடையிலான உறவுகளுக்கு இது அச்சுறுத்தலாக உள்ளது.
இருவரும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் இராஜதந்திர உறவுகளைப் பேண முற்படுகின்றனர்.
ஈரான் கடந்த காலங்களில் எல்லைப் போர்களில் ஜெய்ஷ் அல்-அட்ல் தீவிரவாதிகளை ஈடுபடுத்தியிருந்தாலும், எல்லை தாண்டிய ஏவுகணைத் தாக்குதல்களை ஏனைய நாட்டுக்குள் நடத்தியிருக்கவில்லை.

Post a Comment