கிளிநொச்சியில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு ; 08 பேர் படுகாயம் - 08 மாடுகளும் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , கிளிநொச்சி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளது.

விபத்தில் வவுனியாவை சேர்ந்த திருமணி திருச்செல்வம் (வயது 50) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும்,  யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வானும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதிக்கு குறுக்கே இருந்த மாடுகளே விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments