பொன்னாவெளி:ஜேவிபி உறுதி மொழி!



பூநகரி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலை விடயத்தில் தமிழ் அரசியல் வாதிகள் மௌனம் காத்துவருகின்ற நிலையில் மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த உள்ளதாக ஜேவிபி கட்சியின் தலைவர் அனுர திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி-பொன்னாவெளி அனைத்து மக்கள் ஒன்றிய பிரதிநிதிகள் கொழும்பில் வைத்து நேற்று புதன்கிழமை ஜேவிபி தலைவர்களை  சந்தித்து கலந்துரையாடியபோதே உறுதி மொழிவழங்கப்பட்டுள்ளது.

பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கு நேரடியாக வருகைதந்த ஜே.வி.பியினர் போராட்டத்திற்கு தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக போராட்டகாரர்களிற்கும் ஜேவிபியினருக்குமிடையெ கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சுண்ணக்கல் அகழ்வு நடைபெற்றால் பல கிராமங்கள் அழிவடையும். கடல் நீர் உட்புகும்.  கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர வேண்டிவரும்” என அனுர திசநாயக்க தெரிவித்துள்ளார்.

;.


No comments