யாழ்.மாநகரசபை குழப்பம் செய்கிறது!
வடமாகாணத்தினில் முன்னெடுக்கப்படும் உள்ளுர் தொழிற்துறையினை மேம்படுத்தும் யாழ்ப்பாண வர்த்தக கண்காட்சியினை நிறுத்துவதற்கு யாழ்ப்பாணமாநகர சபையினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக யாழ்ப்பாண தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாண வர்த்தக கண்காட்சி நாளை மறுதினம் முதல் ஆரம்பமாகி இடம்பெறவுள்ள நிலையில் அதனை நிறுத்துவதற்கு யாழ்ப்பாண மாநகர சபை அதிகாரிகளினால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக கண்காட்சியினை நிறுத்துவதற்கும் கடும் அழுத்தத்தினை யாழ்ப்பாண மாநகர சபை பிரயோகித்து வருகின்றது
ஒரு சமூக அக்கறையாக நாம் செயல் படுத்தும் வர்த்தக கண்காட்சியினை நிறுத்துவதற்கு யாழ் மாநகர சபை கடும் பிரியத்தனம் மேற்கொண்டு வருகின்றது
வடக்கு மாகாண ஆளுநரிடம் எமது கோரிக்கையினை முன் வைத்திருக்கின்றோம் வடக்கு மாகாண ஆளுநரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் .
தவறினால் எதிர்வரும் காலத்தில் இந்த மாபெரும் வர்த்தக கண்காட்சி வேறு மாகாணங்களில் நடாத்த வேண்டி வரும் எனவும் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் விக்கினேஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment