கதிரை கவனம்:இரா.சம்பந்தன்!



 புதிய ஆண்டு தமிழர்களாகிய எமக்குத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக இருக்கும் என்று நம்புகின்றோம் என தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டானது இன, மத, கட்சி வேறுபாடின்றி நாட்டு மக்களுக்குச் சமாதானம், மகிழ்ச்சி, சுபீட்சம் மிக்கதாக அமைய வேண்டும்.

அத்துடன் புதிய ஆண்டு தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகின்ற ஆண்டாகத் திகழ வேண்டும்.

புதிய ஆண்டிலாவது புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வு காணப்பட வேண்டும். ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

இல்லையேல் தமிழர்களாகிய நாம் தீர்க்கமான முடிவுகளை புதிய ஆண்டில் எடுப்போமெனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள தமிழரசுக்கட்சி தலைமை தெரிவில் இரா.சம்பந்தன் பதவி துறக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் புதிய தலைமை தெரிவை பிற்போட இரா.சம்பந்தன் தற்போது போராடிவருவது குறிப்பிடத்தக்கது.


No comments