கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்!
இலங்கை படைகளால் அரங்கேற்றப்பட்ட கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நேற்று முழு அளவில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் இலங்கை இராணுவத்தினால் 1987 ஆம் ஆண்டின் இதே நாளன்று 83 அப்பாவி தமிழ் உறவுகள் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
நினைவேந்தல் நிகழ்வானது கிழக்குப்பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் நேற்று (28) பொங்கு தமிழ்த் தூபியின் முன்பாக ஈகைச்சுடரேற்றி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை கொக்கட்டிச்சோலை படுகொகொலை 37,வது ஆண்டு நினைவு வணக்கம் மகிழடித்தீவு சந்தி நினைவுத்தூபியில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் உறுப்பினர்களால் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்ருந்தது.
முன்னதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும் மகிழடித்தீவு சந்தி நினைவுத்தூபியில் நினைவேந்தலை முன்னெடுத்திருந்தன.

Post a Comment