பதவி விலகினார் டென்மார்க்கின் ராணி


ஐரோப்பாவின் நீண்ட காலம் அரியணையில் இருந்து வரும் டென்மார்க்கின் ராணி மார்கிரேத் II ஞாயிற்றுக்கிழமை தனது பதவி விலகலை அறிவித்து தனது நாட்டு மக்களை ஆச்சரியப்படுத்தினார்.

இந்த மன்னாராட்சியை தனது மகனுக்கு மாற்றுவதாக அறிவித்தார்.

ராணி தனது பாரம்பரிய புத்தாண்டு உரையின் போது, ​ ஜனவரி 14 ஆம் திகதி பதவி விலகுவதாக பார்வையாளர்களிடம் கூறினார். 

83 வயதான அவர் எதிர்பாராத முடிவுக்கான காரணங்களாக தனது வயது மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டினார்.

இன்றும் இரண்டு வாரங்களில், நான் 52 ஆண்டுகள் டென்மார்க்கின் ராணியாக இருப்பேன் என்று மார்கிரேத் கூறினார்.

இவ்வளவு நீண்ட ஆட்சி யாரையும் பாதிக்கலாம். கடந்த காலத்தில் ஒருவர் நிர்வகித்த அளவுக்கு ஒருவரால் மேற்கொள்ள முடியாது என்று கூறினார்.

அவருக்குப் பதிலாக அவரது மகன் இளவரசர் ஃபிரடெரிக் மன்னராக பதவியேற்க உள்ளார். ஜனவரி 14 திகதி ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் 1972 இல் இந்த நாளில்தான் மார்கிரெத்தின் தந்தை மன்னர் ஃபிரடெரிக் IX காலமானார். அவரின் இறப்பை அடுத்து  அரியணையை தற்போதைய ராணியிடம் கையளிக்கப்பட்டது. 


No comments