வேலையிலிருந்து நிறுத்து:அமைச்சர் பணிப்பு!

 


இலங்கை அரசு தொழிற்சங்கங்களை மோசமாக ஒடுக்கி அடக்க முற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 03, 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது பொதுச் சேவைகள் மற்றும் மின்சார விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள மின்சாரசபை தொடர்ந்தும்  நட்டத்தில் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments