ரோசமுள்ள நல்லை ஆதீனம்!
நான்கு நாட்களாக யாழில் தங்கியிருந்து டக்ளஸ் சகிதம் ரணில் காட்டிவரும் படம் ஓய்ந்தபாடாவில்லை.
இந்நிலையில் ஈபிடிபி ஏற்பாட்டில் சர்வமதத் தலைவர்களில் சிலரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று சந்தித்தார்.
இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் கச்சேரியில் சர்வமதத் தலைவர்களை சந்தித்த போதும் நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் ஆறுதிருமுருகன் மற்றும் வேலன்சுவாமிகள் சந்திப்பினை புறக்கணித்துள்ளனர்.
இதனிடையே ஆதீனத்தை விடுத்து பிறிதொரு இடத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவை இல்லை என்ன நல்லையாதீனத்தின் செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார.
இன்றைய ஜனாதிபதியுடனான சர்வமத தலைவர்களுடான சந்திப்பினை புறக்கணித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,
இன்றைய சர்வ மத தலைவர்களின் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது அதேபோல எங்களது அடையாள அட்டை இலக்கங்களும் அதிகாரிகளால் கேட்கப்பட்டது.
ஆனால் ஏற்கனவே ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஜனாதிபதியினால் எந்தவித ஆக்கபூர்வமான தீர்வும் வழங்கப்படவில்லை என்பதனாலும் நெல்லை ஆதீன குரு முதல்வர் பிறிதொரு இடத்தில் ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவை இல்லை என்பதனாலும் நானும் நல்லை ஆதீன குருமுதல்வரும் இன்றைய ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்களின்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்,
மகாநாயக்க தேரர்கள் ரணிலை தேடிவந்து சந்திப்பதில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment