கடந்த 24 மணி நேரத்தில் 158 பேர் உயிரிழப்பு


காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 158 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியில் நூற்றி ஐம்பத்தெட்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் இயங்கும்சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 320 பேர் காயமடைந்துள்ளனர்.

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சண்டை வெடித்ததில் இருந்து காஸாவில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் 24,285 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 61,154 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகம் பொதுமக்கள் மற்றும் போராளிகளின் உயிரிழப்புகளை வேறுபடுத்துவதில்லை. இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments