பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் சாரதி உயிரிழப்பு


குருணாகல் – தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக  இயங்கியதில், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி லொறி சாரதி உயிரிழந்துள்ளார்.

நாரம்மல பகுதியில், நேற்றைய தினம் வியாழக்கிழமை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்றை பொலிஸார் துரத்திச் சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர்  சாரதியை சோதனை செய்தபோது, பொலிஸ் உப பரிசோதகரின் துப்பாக்கி இயங்கியதில், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சாரதி  உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் உப பரிசோதகர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments