பொன்னாவெளி:அதிகாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்!
அரசியல்வாதிகள் கைவிட்டுள்ள நிலையில் பூநகரி பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைக்கான அனுமதியை வழங்குவது தொடர்பில் கனிய வளத்திணைக்கள அதிகாரிகள் ஏனைய அரச அலுவலக அதிகாரிகள் சகிதம் ஆய்வுகளை முன்னெடுக்க வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் வருகை தந்திருந்த அரச அதிகாரிகளை முற்றுகையிட்ட ஊர் மக்கள் அங்கு முன்னெடுக்கப்படும் அகழ்வுபணிகளிற்கான முன்னேற்பாடுகளை தடுத்து நிறுத்திய பின்னரே தமது போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.
ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கணக்கிலான பொன்னாவெளி,வேரவில்,வலைப்பாடு உள்ளிட்ட ஜந்து கிராம மக்கள் போராட்டத்தில் குவிந்திருந்தனர்.
எமது பூர்வீக நிலங்களை உவர்நிலங்களாக மாற்றி, வாழ்வாதார செயற்பாடுகளை அடியோடு அழிக்கின்ற அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வலைப்பாடு,வேரவில் மற்றும் கிராஞ்சி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடடோம். தழிழர் தாயக பகுதியெங்கும் காணப்படும் வளங்களை தாரைவார்த்து கொடுக்கும் அரசாங்கத்தின் காட்டுமிரான்டி தனமான செயற்பாட்டுக்கு அனைத்து தமிழ் உறவுகளையும் இணைந்து கொள்ளவேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்திருந்தனர்.
Post a Comment