மகிந்த சென்றபின் தங்காலையில் ஜஸ் மயம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தங்காலை பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.அத்துடன், மேலும் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து வீட்டையும் அதன் சுற்றுப் பகுதியிலும் தேடுதல் நடத்திய போது மூன்று லொறிகளிலிருந்து 624 கிலோ நிறையுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் நான்கு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரி 56 ரக துப்பாக்கி என ஐந்து துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நபர்கள் லொறிகளின் சாரதிகள் என நம்பப்படுகிறது.
தென்னிலங்கையில் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுவருவதுடன் பாதாள உலக கும்பல் முக்கியஸ்தர்கள் கைதாகிவருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் கைது செய்யபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment