21ம் திகதி அழைக்கிறார் ரணில்!
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பெயரிலான ரணில் ஆட்சிக்கான வெள்ளையடிப்புக்கள் மத்தியில் எதிர்வரும் 21ஆம் திகதி வடகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிற்பகல் 3 மணிக்கு அவர் சந்திக்கவிருப்பதாக இன்று மதியம் செய்தி அனுப்பியுள்ளார்.
கடந்த 11-ம் மாதம் 26 27ஆம் திகதிகளிலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு 11 பேர் சிறையில் இருக்கின்றார்கள்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்குள் வெளிவராத முறையில் கைது செய்து சிறையில் அடைத்தால் அடுத்த ஆண்டு மாவீரர் தின வேலைகளை யாரும் செய்ய முன்வரமாட்டார்கள் என்பதற்காகவே கைதுகளை செய்திருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை புலிகள் சம்பந்தமான பதாகைகள் எதையுமே வைத்திருக்காமல் அவர்கள் தங்களுடைய உறவுகளை நினைவு கூருவதற்காக சென்ற வேளையிலே அல்லது பங்கு பற்றிய வேளையிலே அவர்களை கைது செய்துள்ளனர்.
மாவீரர்களை நினைவுகூர்ந்தவர்களையும் அவர்களது பெற்றோர்களை கௌரவித்தவர்களையும் பேக்கரியில் கேக் விற்றவரையும் குடும்பச் சண்டையிலே ஈடுபட்டவர்களையும் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்வது என்பது அதுவும் பயங்கரவாதத்தை கைது செய்வது ஏற்க முடியாது
நிச்சயமாக 21ஆம் திகதி 3 மணிக்கு நாங்கள் ஜனாதிபதியை சந்திப்போம் அவரிடம் நாங்கள் கைது விடயங்கள் தொடரபாக பேசுவோம் எனவும் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment