இந்திய மீனவர்கள் வேட்டையில் சீன கப்பல்!

 


மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை வேட்டையாட அண்மையில் சீன அரசு அன்பளிப்பாக வழங்கிய கடற்படை கப்பல்கள் பயன்படுத்தப்படுவது அம்பலமாகியுள்ளது.

இதனிடையே அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 4 படகுகளுடன், 21 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்பரப்பில், கடற்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 3 படகுகளுடன், 13 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்றிரவு, காங்கேசன்துறை கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தலைமன்னார் கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான அனைத்து மீனவர்களையும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


No comments