கோவில் கட்டும் விதுர விக்கிரமநாயக்க !
வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்படும் இனவாத முரண்பாடுகளுக்கு விதுர விக்ரமநாயக்கவே கதாநாயகன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சாடியுள்ளார்.
புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார், தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக ஜனாதிபதி விதுர விக்கிரமநாயக்கவை பதவி விலக்கியிருக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விதுர விக்கிரமநாயக்க தற்போதைய அரசிர் புத்தசாசன அமைச்சராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
இதனிடையே தமிழர்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை,புறக்கணிக்க போவதுமில்லை என புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
“பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை ஏனைய மதங்களை இரண்டாம் பட்சமாக்க வேண்டும் என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொன்மை வாய்ந்த இந்து கோயில்களை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்து மத விவகாரங்கள் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்து மத கலாசாரத்தையும்,மத சின்னங்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” எனவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment