சாராய வியாபாரத்தில் அமைச்சரா?
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் டக்ளஸ் மதுபானசாலைக்குரிய அனுமதியினை வழங்க சொன்னதனால்தான் தான் வழங்கியதாக கரவெட்டி பிரதேச செயலர் பகிரங்கமாக அறிவித்துள்ளாhர்.
இந்நிலையில் "இன்றைய தினம் உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவை சந்திருந்தார்கள்.
இந்த சந்திப்பில் அமைச்சருடன் அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து அதனை ஆராய்ந்து மதுபானசாலையை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வதாக அமைச்சர் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்
அத்தோடு மக்கள் எதிர்புக்கள் இருந்தால் அந்த இடத்தில் மதுபானசாலை அனுமதியை வழங்கமுடியாதென சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறிப்பிடடுள்ளனர்.
Post a Comment