யாழில் ஒரே நாளில்,110 பேர்!

 


யாழ். மாவட்டத்தில்  டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை ஒரு வார காலத்தில்  அகற்றத் தவறும் சகல அரச, தனியார் நிறுவனங்களிற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய  செயலாளர் க.கனகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

யாழில் ஒரே நாளில், நாளில் நேற்று மட்டும் 110 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு யாழ். போதனா  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நல்லூரில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. 

மேலும், யாழ் பல்கலைக்கழகம்,  யாழின் பிரபல பாடசாலைகள், யாழிலுள்ள அரச தனியார் வைத்தியசாலைகள் போன்றவற்றில்  அதிகளவிலான டெங்கு பரப்பும் நுளம்பின் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வீடுகளை விட நிறுவன வளாகங்களில் அதிக  குடம்பிகள்  காணப்படுகின்றமை  கொழும்பிலிருந்து யாழ். வந்த விசேட குழுவின் பூச்சியியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளரது பணிப்பிற்கிணங்க  வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் சுகாதாரத் துறையினருக்கான விசேட கூட்டமொன்று நடைபெற்றது. 

இதன்போது யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments