தேர்தல் வரும் பின்னே:ரணில் வருவார் முன்னே!
பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ரணில் விக்ரமசிங்க ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.
வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்க நல்லாட்சி காலத்தில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் பாலியாற்று குடிநீர் விநியோகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது கைகூடாத நிலையில் திட்டத்திற்கு 250 மில்லியன் ரூபாவை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே தனது வடக்கு விஜயத்தின் போது பூநகரி நகரமயமாக்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் ரணில் விக்கிரமசிங்க பங்கெடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இந்திய மற்றும் சீன ,அவுஸ்திரேலிய பெரும் முதலீடுகள் புதுப்பிக்கத்தக்க மீள் சக்தி திட்டத்தின் கீழ் பூநகரியை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment