நெல்லியடியில் ஹெரோயினுடன் பெண் கைது


யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில், 51 வயதுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

தனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து ஆறு கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை  பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.-

No comments