வெறுமையானது பெத்தலகேம்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரத்து!!
பெத்தலகேமில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வழமையாக மேங்கர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்தீகர்கள் காணப்படுவர். இம்முறை இவர்கள் ஒருவரையும் அங்கே காணமுடியவில்லை.
இம்முறை இங்கே எதுவித கொண்டாட்டங்களும் இருக்கவில்லை. குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் சாண்டாவும் இங்கு இல்லை. சதுக்கத்தில் நடுவில் வைக்கும் பிரபலமான கிறிஸ்துமஸ் மரமும் இல்லை. கரோல் அல்லது கிறிஸ்துமஸ் சந்தைகளும் இல்லை.
இவற்றுக்குப் பதிலாக பொிய பாறைகள் முற்றும் முட்கம்பிகளால் சூழப்பட்ட புதிதாகப் பிறந்த இயேசுவைக் காட்டும் பிறப்புக் காட்சி, காஸாவின் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக யாருமே இல்லாத நேட்டிவிட்டி தேவாலயத்தில், தந்தை ஈசா தல்ட்ஜியா என்னிடம் எனது நகரம் என்னை நிழலாக உணர்கிறது என்று கூறுகிறார்.
நான் 12 ஆண்டுகளாக இந்த தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கிறேன். நான் பெத்லகேமில் பிறந்தேன். நான் யாருமே இல்லா கிறிஸ்துமஸ் நிகழ்வைப் பார்த்ததில்லை.
காசாவில் எங்களுக்கு சகோதர சகோதரிகள் உள்ளனர். இது கிறிஸ்துமஸ் நிகழ்வைக் கொண்டாடுவதை கடினமாக்குகிறது. ஆனால் பிரார்த்தனைகளில் நாங்கள் ஒன்றுபடுவது நல்லது என்று கூறினார்.

Post a Comment