பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள்: தூதரை திருப்பி அழைத்தது ஜோர்டான்


காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலுக்கான தனது தூதரை உடனடியாக திரும்பப் பெறுவதாக ஜோர்டான் அறிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் முன்னோடியில்லாத மனிதாபிமான பேரழிவை உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளது ஜோர்டான்.

காசாவில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலியப் போருக்கு கண்டனத்தைப் பிரதிபலிக்கும் வகையில், வெளியுறவு அமைச்சர் அய்மன் சபாடி இஸ்ரேலுக்கான ஜோர்டானின் தூதரை உடனடியாக திரும்பப் பெற முடிவு செய்தார் என்று ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் இஸ்ரேல் தனது போரை நிறுத்தினால் மட்டுமே அதன் தூதர் திரும்புவார் என்று அமைச்சகம் கூறியது.

No comments