நியூசிலாந்து ஒக்கிலாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

2023ஆம் ஆண்டின் முதலாவது மாவீரர் நாள் ஓக்கிலாந்து, நியூசிலாந்தில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது.

இன்று 27 நவம்பர் 2023 தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் Mount Roskill War Memorial Hall இல் மாலை 5.30 மணியளவில் பெருந்திரளான தமிழீழ மற்றும் தமிழக மக்கள் முன்னிலையில் மிக எழுச்சியாக ஆரம்பமானது.

நிகழ்வின் முதல்கட்டமாக பொதுச்சுடரானது  நியூசிலாந்து தமிழ் தேசிய செயற்பாட்டாளரன மோகன் அவர்களால் ஏற்றப்பட்டது. நியூசிலாந்து தேசிய கொடி, நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சுந்தராஜன் அவர்களாலும் நியூசிலாந்து தேசிய பூர்வீக கொடி நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் தயாகரன் அவர்களாலும் ஏற்றப்பட்டது.

தமிழீழ தேசிய கொடியினை கப்டன் கொள்கைபிறை அவர்களின் தாயார் அவர்களால் ஏற்றப்பட்டது. தமிழீழ கொடியேற்றும் போது தமிழீழ தேசிய கீதமானது இசைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மக்களால் மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சரியாக 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

தொடர்ந்து ஈகைச்சுடரனது மேஜர் சிவா அவர்களின் தாயார் அவர்கள் ஏற்றிவைத்தார். பின்னர் மாவீரர் உணர்வுகளை தாங்கிய பாடல் ஒலிக்கும் போது, தமிழீழ மற்றும் தமிழக மக்களால் எம் தமிழீழ மண்ணின் விதை வேர்களாகிய மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். மேலும் நியூஸிலாந்திலே இருக்கக்கூடிய பெற்றோர் மற்றும் சகோதரர்களின் குடும்பத்தை சார்ந்த மாவீரர்களுக்கு, விதையுடல் தாங்கிய மாதிரி கல்லறை சுமார் முப்பத்தைந்து அமைக்கப்பட்டு, பெற்றோர் மற்றும் சகோதரர்களினால் உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது சிறப்பம்சமாகும்.

பின்னர் எம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் ஒருபகுதி ஒலிபரப்பப்பட்டது.

தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவம் தாங்கிய புகைப்படத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட அரங்கத்தினுள்ளே நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.

தொடர்ந்து சிறார்கள் மற்றும் தமிழ் பாடசாலை மாணவர்களின் மாவீரர்களின் நினைவுகளை தாங்கிய பாடல், நடனம் கவிதை போன்ற பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

தொடர்ந்து பசுமைகட்சியின் துனணதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மறமா டேவிட்சன் அவர்களின் உரை இடம்பெற்றது. அவரது உரையில் தமிழிழத்துக்காக பலவயதுப்பட்டவர்களும் தங்கள் இன்னுயிரை கொடுக்க எத்தனை அர்பணிப்புகளை கொடுத

துள்ளார்கள், இந்த மாவீரரை இங்கு உள்ள மக்கள் எப்படி உணர்வுடன் மனதில் வைத்திருக்கிறார் என்பது நன்கு தெரிகிறது. தமிழருக்கு தனித்தமிழ் ஈழம் கிடைக்கவேண்டும், இதுபோன்று உலகில் போராடும் மக்கள் போராட்டங்கள் வெல்லவேண்டும் என்று கூறினார். அவரது சிறப்புரை மக்களால் வரவேற்கப்பட்டது.

தொடர்ந்து தமிழ் தேசிய உணர்வாளர் சன் மாஸ்டர் மாவீரர் புகழ், அவர்கள் அர்பணிப்பு பற்றி பேசத்தொடங்கினார். தற்போதுய நிலைமைகள் பற்றி தொடர்ந்து பேசியவர், எங்கள் இளைய தலைமுறைக்கு எங்கள் வரலாறையும் தமிழர் என்ற அடையாளத்தையும் ஆளப்பதக்கவேண்டும் என்றும் கூறினார். அவர் உரையை முடிக்கும் போது, இந்தப் பணியை தமிழர் ஒருங்கிணைப்பு குழு - நியூசிலாந்தும், தமிழ் பாடசாலைகளும் முழுமூச்சுடன் செய்யவேண்டும் என்றும் கேட்டுகொண்டார். அவரது சிறப்புரை இன்றைய தேவைகளை மையமாக வைத்து அமைந்திருந்தது.

பின்னர் நிகழ்வின் இறுதியாக  நியூசிலாந்து தேசிய கொடியினை நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சுந்தராஜன் அவர்கள் இறக்கிவைத்தார்.

தமிழீழ தேசிய கொடியினை நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் தயாகரன் இறக்கிவைத்தார்.

நியூசிலாந்து தேசிய பூர்வீக கொடியினை நியூசிலாந்து பசுமைகட்சியின் துணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மறமா டேவிட்சன் இறக்கிவைத்தார்.

இத்துடன் தமிழர்களின் புனிதனாளாம் தமிழீழ மாவீரர் நாளானது அதிகமான நியூசிலாந்தில் வாழும் தமிழீழ மற்றும் தமிழக மக்கள் சாட்சியாக தமிழ்த் தேசியம் நோக்கிய பாதையில் ஒரு படிக்கட்டென " நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்......." எழுச்சி பாடலுடன்  இனிதே நிறைவுற்றது.

No comments