பிரான்ஸில் கடற்புலிகளின் சிறப்பு மாவீரர் நினைவேந்தல்

 


மாவீரர் நாளான நேன்று கடற்புலிகளின சார்பில் பிரான்சு செவ்ரோன் பிராந்தியத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில்  மதியம் 12:30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது. பொதுச் சுடரினை திரு. குகன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பிரான்சு நாட்டின் தேசியக்கொடி திரு. கதிர் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி திரு. மருது அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பொதுப்படத்தினை திரு. செந்தூரன் அவர்கள் திறந்து வைக்க, பொதுப்படத்திற்கான மலர் மாலையை திரு. நிமால் அவர்கள் அணிவித்து மாவீரர் நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தாயக நேரம் மாலை 06:07 மணிக்கு மாவீரர்களுக்கான பிரதான சுடர் நீரேரியில் சிறப்பாக அமைக்கப்பட்ட படகில்

மாவீரர் லெப்.கேணல் சுதா அவர்களின் சகோதரன் திரு. மதி அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. சம நேரத்தில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்களினால் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவுக் கல்லறைகளில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தாயகக் கனவுடன் பாடலுடன் அனைவரும் மழையில் நனைந்து மாவீரர் நாள் நிகழ்வினை மிகவும் உணர்வு பூர்வமாக நினைவேந்தினார்கள்.

தொடர்ந்து செவ்ரோன் நகர மேயர் திரு. Stéphane Blanchet அவர்கள் மாவீரர்களின் பொதுப்படத்திற்கு மலர்வணக்கம் செய்து மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் மாவீரரின் பொதுப்படத்திற்கு மலர்வணக்கம் செய்தனர்.

செவ்ரோன் நகர மேயர் திரு. Stéphane Blanchet சிறப்புரை ஆற்றியதைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி மற்றும் பிரான்சு நாட்டின் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் மாவீரர் தின நிகழ்வுகள் மாவீரர் சுமந்த நினைவுகளோடு நிறைவு பெற்றது.


No comments