யாழில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!


 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவர் வாள் வெட்டு , கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கடந்த சில மாதங்களாக தேடி வந்த நிலையில் பலாலி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் மறைந்திருப்பதாக பொரிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை யாழில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டு வரும் மற்றுமொரு சந்தேகநபர் ஒருவர் இந்தியாவில் தலைமறைவாக உள்ள நிலையில் குறித்த சந்தேக நபருடன் தொடர்புகளை பேணி, இந்தியாவில் இருந்து அவர் சொல்லும் நபர்கள் மீது, பணத்தினை பெற்றுக்கொண்டு, இன்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வாள் வெட்டை மேற்கொண்டு வந்தார் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

No comments